திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

நடுவழியில் ஒரு பயணம்!

வ.ந.கிரிதரன் பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 12

நாகரத்தினம் கிருஷ்ணாமறுநாள்காலை பொடிநடையாக சிறிதுதூரம் நடந்துவிட்டு வரலாமென அப்பாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன், வழியில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டோம். எங்கள் ஜாகைக்குத் திரும்புகையில், ஊசியிலைத் தோப்புவழியாகப் போகலாமே என்றேன், அவரும் சம்மதித்தார். அப்போது…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை

சி. ஜெயபாரதன், கனடாமகத்தானது, மர்ம மானது மரணம்! புகட்டலாம் அதனை இரண்டு விதத்தினில்! என்றோ ஒருநாள் சாவது உறுதி! எப்படிச் சாவு வரும் நமக்கு? எப்போது சாவு வரும் நமக்கு? என்பதி லில்லை உறுதி!…

மடியில் நெருப்பு – 13

ஜோதிர்லதா கிரிஜா 13. அப்பா முதலில் பேசட்டும் என்பது போல் ராஜாதிராஜன் ஒரு புன்னகை மட்டும் காட்டிவிட்டு ஒன்றும் பேசாமலே இருந்தான். மறுமுனையில், தண்டபாணி, "அது உன்னோட சொந்தக் கவலை. அதுக்கும் எனக்கும் என்னப்பா…

வட்டங்கள் சதுரங்கள்

எஸ். ஷங்கரநாராயணன் வீட்டைக் கானல் சதுரம் என்கிறாள் கிருஷாங்கினி. சதுரங்களின் உள்ளிறுக்கம் அவளைத் திகைப்படைய வைத்திருக்க வேண்டும். கனவுகளை ஆர்வத்தோடு, சதுரங்களுக்கு வெளியே தாயக்கட்டைகளைப் போல வீசி உருட்டி விளையாடும் மனிதன் அதற்கேற்ற பலன்களை…

திசை அணங்கு

திலகபாமா,சிவகாசி இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம் தொலைத்து வெற்று சிற்பமாய் இன்று சிரிப்பை…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 11

நாகரத்தினம் கிருஷ்ணா நடந்து முடிந்த சம்பவத்தினால், சில பிரச்சினைகளும் வந்தன. பொதுவாக தங்களிடத்தில் நியாயமிருப்பதாக நம்பிக்கொண்டு, தங்கள் நடவடிக்கைகளில் கறாராக இருப்பவர்களில் பலரும், பிறருடன் இணங்கிப்போகிறவர்களல்லர். ஆன்னும்(Anne) அதற்கு விதிவிலக்கானவளல்ல. சற்றுமுன்னர் அவள் நடந்துகொண்டமுறையும்…

மடியில் நெருப்பு – 12

ஜோதிர்லதா கிரிஜா அதே நாளின் விடியற்காலையில், 'யாரு இப்படிப் பொழுது விடிஞ்சதும் விடியாததுமாக் கூப்பிட்றது' என்று மனத்துள் சலித்தபடி ராஜாதிராஜன் தொலைபேசியை நெருங்கினான். "ஹல்லோ!" "ராஜாவா?" "யாருங்க பேசுறது?" "என்னப்பாது! யாருன்னு கேக்குறே! குரல்…

சுப்புணியின் நாடக அரங்கேற்றம்

கௌரி கிருபானந்தன் கலா நிலையம் நாடகக் குழுவினர் "ஸ்ரீகிருஷ்ண தூது" என்ற புராண நாடகத்தை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். மறுநாள் மாலை செட்டியார் ஹாலில் நாடகம் போடுவதாக ஏற்பாடு. அந்த ஊர் மக்கள் புத்திசாலிகள்.…