திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

உயிரே

பவளமணி பிரகாசம் சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து களங்கள் கடந்து கனவாய்…

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)

தமிழில்: சிபிச்செல்வன் நற்குணம் நீ ஒரு பெண் அதை மறக்ாமலிருப்பது நல்லது உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது ஆண்கள் ஷாடையாகப் பார்ப்பார்கள். நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து…

வலி

இளந்திரையன் முக்காட்டின் சரிவுக்குள் முகம் ஒழித்தபடி நகர வேண்டும் விரைவாய் காற்றின் வாடையில் கந்தகமும் தூசியும் காதடைக்கும் கதறலும் ஓசையும் நீண்டு செல்லும் இமைப் பொழுதுகள் கற்குவியலுக்குள் கை நீட்டி உதடு விம்மும் சிறுமியின்…

பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்

பா சத்திய மோகன் 926. நீர் வளம் மிக்க மேல்மழநாடு எனப்படும் நாட்டின் பக்கங்களில் பரவும் மணமுடைய அழகிய சோலையில் வான் சந்திரன் வந்து ஏற சூடு அடிக்கும் நெல் பரப்பிய பண்ணையின் வரம்புகளில்…

அன்பின் வெகுமானமாக…

சுகுமாரன் @ அன்பின் வெகுமானமாக நீ கொடுத்த பூங்கொத்தின் ஏதோ ஒரு மலரில் மிஞ்சியிருக்கிறது - தேன்கூட்டை முழுமையாக்கும் கடைசித் துளி தேன். எது அந்த மலரென்ற கேள்வியில் விரிகிறது - காலம். 19…

கவிதைகள்

ஏக்நாத் சாமிகள் .... வாயைக்கட்டிய சாமிக்கு மீண்டும் ஆங்காரம் வர கும்பாபிே ?கம் நடத்தணுமாம். தலைக்கட்டுக்கு ஆயிரம் வரியென விதித்ததில் வாயைக்கட்ட ஆரம்பித்தேன் நான். .... எல்லா பெண்களுக்கும் குங்குமம் வைக்க சாமியாடிகளால் மட்டுமே…

எனது முதலாவது வார்த்தை..

சுகுமாரன் எனது முதலாவது வார்த்தை எந்த மொழியிலிருந்ததென்றோ எந்த உணர்வால் கிளர்ந்ததென்றோ எவ்வளவு குடைந்தும் நினைவில் இல்லை இன்று எனக்கு யோசிக்க பரிமாற பிழைக்க மூன்று மொழிகள் தெரியும் உபரியாக மெளனமும். எனது கடைசி…

நிழல்களைத் தேடி….

புதியமாதவி ---- நிழல்களின் ஊர்வலம். கைதட்டுகின்றன நிஜங்கள் ஒலிபெருக்கிகளின் குரல்வலை நெறித்து வாக்குறுதிகள் வலம் வருகின்றன. ஆட்டுமந்தைகளை அடைத்துவைத்து வெற்றி விழா நடத்துகிறது மக்களாட்சி. கைதட்டலில் கூத்தாடுகிறது உங்கள் கொடிகள். உங்களுக்குத் தேவை எங்கள்…

அவரால்…

நெப்போலியன் கல்லறைக்கதவு திறக்கப்பட்டிருந்தது. பிரேதம் கட்டப்பட்டிருந்த துணிச்சீலைகள் மட்டுமிருந்தன. அவரைக் காணாத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். சீடர்களைத் தரிசிப்பதற்காய் சென்றிருக்கலாம் அவர். தழும்புகளின் உறுதிப்படுத்துதலுக்காய் நடந்தேறிய காரியமெனலாம். இன்னும் சிறிது நேரத்தில் அவர் பரலோகமேறுவதை…

கவிதைகள்

கவிநயா பாறை பாறை பேசாதிருக்கிறது... கட்டிப் பிடித்துக் கொண்டாடும் போதும் முத்த மிட்டுக் கூத்தாடும் போதும் கோபம் கொண்டு குமுறும் போதும் கண்ணீர் விட்டுக் கதறும் போதும் போற்றிப் பாடித் துதிக்கும் போதும் தூற்றித்…