- சாய்ந்த மரம்
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முக்காலடி
- கனவதே வாழ்வாகி….
- திரவியம்
- நிகழ்வுகள்-2004
- கண்ணதாசா
- ஒளியினை இரத்தல் பற்றி….
- அம்மி
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- இறகில்லா சின்னப்பறவை
- ஏணி
- கனவு
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- இடுக்கண் வருங்கால்…
- கடலாமைக் குஞ்சுகள்
- மணி என்ன ஆச்சு ?
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- ஞானம்
- ஒரு இந்தியக் கனவு
- சந்திரமுக அந்நியன்
- பார்வை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- சீட் பெல்ட்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
புதியமாதவி.

என் மரம்
ஆயிரமாயிரம் இலைகளுடன்
என்னுடன் உறவாடிய என் மரம்
நேற்று பெய்த மழையில்
இன்று வீழ்ந்துகிடக்கிறது.
கைகளை மடக்கி
கால்களை விரித்து
வேர்களின் ரத்த நாளங்கள் நசுங்கி
எப்போதும் நான் அமரும்
என் சிமெண்ட் பெஞ்சில்
இப்போது தலைசாய்த்து
குப்புறவீழ்ந்து குற்றுயிராய்க் கிடக்கிறது.
அருகில் சென்று தொட்டுப்பார்த்தேன்.
வாடாத இலைகள்
என்னை-
என் கண்களை வருடுகின்றன.
எத்தனை நாட்கள்
இதன் மடியில்
எத்தனைக் கவிதைகள்
இதன் அடியில்
புதைந்து கிடக்கின்றன.
எனக்கே தெரியாத
என் மனக்குகையின் ஓவியங்கள்
இந்தக் கிளைகளின் அடியில்தான்
வெளிச்சத்திற்கு வந்தன.
இலைகள் வாடாத என் மரத்தை
எடுத்து நிமிர்த்தி
மீண்டும் மண்ணில் வளர்க்க
மறுக்கின்றான் தோட்டக்காரன்.
மழையுடனும் காற்றுடனும் போராடி
காயப்பட்ட என் மரத்தை
மண்ணின் மனிதர்கள்
கோடாரியால் வெட்டுகிறார்கள்.
சிதறி விழுகிறது
என் கவிதைக்கிளைகள்.
கண்ணீர் மழையில்
காற்றுடன் கிழிந்துக்கிடக்கிறது
என் கவிதைமொழிகள்.
வாடாத இலைகள்
கை அசைத்துச் செல்கிறது
மவுனத்தின் கடைசி மூச்சு
சத்தமாகச் சொல்கிறது
எங்காவது மரத்தின் கிளைகள்
மண்ணில் வேர்விடலாம் என்று.
—-
puthiyamaadhavi@hotmail.com