திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நிராகரிப்பின் வலி

அன்பாதவன் தவிக்கிறாய் உன்னுள்- எனினும் தவிர்க்கிறாய் என்னை உரையாடல்களில் உடைபடுமென்று மவுனங்களை பொத்தி காக்கிறாய் ரகசியங்களின் இருட்குகையில் இருப்பதறியாது தவிக்கிறேன், இருட்டில் வெய்யிலில் வீடு நுழைந்தவன் போல அடித்து சாத்தியக் கதவின் விளிம்பில் சிக்கிய…

காமதகனம்

அன்பாதவன் 1. மறந்து போனதுதான் உடல்வாசம் மவுன கிறுக்கத்தில் மூடிக் கொண்டிருக்கும் புலன்களின் கதவுகளை நுகரத் திறந்துவிடு முழுமையாய் புரண்டெழுந்து மணக்கட்டும் என் மீதும். 2. சிறிய பிளவுகளில் என்னை அனுமதிக்க தேவையாயிருக்கிறது பெரிய…

தெருவிளக்குகள்

ஸ்ரீமங்கை ---- முன்பெல்லாம் குழல்விளக்கு இத்தெருவில். இறந்த பூச்சிகள் கரியாக அடைத்துக்கிடக்க பாதிக் குழல் காட்டியபடி மழை முடிந்ததென யாரும் கேட்காமலே மங்கிய ஒளியில் மெளனமாய் அறிவித்துக்கிடக்கும். மின்சாரம் பாய்ந்தும் மூன்று மணிநேரமாய் மினுமினுக்கி,…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு

வெண்ணிலாப்ரியன். எருமை மாட்டின் தோல் போல இருக்கிறது இரவு தலை சாய்த்து படுத்திருக்கும் எருமையின் மேற்பரப்புகளில் நிலா வெளிச்சம் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக்கொள்ளும் வேட்கையில் கொசுக்கள் எருமை மாடு தவணைமுறையில் விரட்டிக்கொள்கிறது நிலா வெளிச்சம்…

பெரியபுராணம் – 23

பா. சத்தியமோகன் 12 . விறன்மிண்டநாயனார் புராணம் 491. மணங்கமழ் கொன்றை மாலையும் சடையும் உடைய சிவபெருமானின் திருவடிகள் வணங்கித் பெரும் தவம் செய்த பரசுராமன் எனும் முனிவனைப் பெற்ற நாடு அலை கடலில்…

கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறிய இப்பூவைப் பறித்து மாலை தொடுக்க எடுத்துக்கொள், தாமதப் படுத்தாமல்! இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய் கீழே வீழ்ந்து புழுதி மண்ணில் துவளும் என்று அஞ்சும் என் மனம்! இப்போது…

புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்

புதுவை ஞானம் (கன்பூசியஸை அடியொற்றி) பேரரசு முழுமைக்கும் நன்னெறியை நிலைநாட்ட விரும்பிய முன்னோர்கள் முதலில் தங்கள் மாநிலத்தை நெறிப்பபடுத்தினார்கள். மாநிலத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை நெறிப்படுத்தினார்கள் குடும்பத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள் முதலில்…

மாந்தரென்றால்….

கி. சீராளன். விளக்கில் திரி ஏறி சுடரொன்று ஒளிர சுற்றிலும் மாந்தரெல்லாம் வாய்பொத்தி கூழை உடல் செய்து, விட்டில் பூச்சிகளாய் வீணாய் போனீரே, சுடருக்குள் ஓர் இருள் மையம் அறியீரோ. மட்டில் மதியின்றி முன்னேரு…

மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

தமிழில் : சுகுமாரன் ஐந்து @ அந்த அறையிலிருந்த ஏழை உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும் அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது, கடின இதயமுள்ள மரணமே, இரும்புச் சிறகுள்ள பறவையே, உன்னையல்ல. ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை…

கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1

எஸ். ஷங்கரநாராயணன் --- முன்னுரை பட்டாம்பூச்சியின் சவ ஊர்வலம் --- 1 நல்ல கவிதைகள் எழுதப்படக் காத்திருக்கின்றன ஜன மொத்தமும் காத்திருக்கிறது நானும் நான் கவித்தாயை எத்துகிறேன் தாயே தயை செய் பால்குடிக்க அழுகிறேன்…