This entry is in the series 20110320_Issue

ஹேமா(சுவிஸ்)


******************

இயல்பை விடுத்து
இப்போ…
தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
பறந்துகொண்டிருக்கலாம்.

நாளை…
நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

இன்னொரு நாள்…
இடப்புறச் சங்குக்குள்ளும் ஒளிந்திருக்கலாம்.

பிறகொருதரம்…
பிணங்கள் புதைக்கும் இடத்திலும் பார்த்ததாகச்
சிலர் சொல்லலாம்.

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள் அடைபட்டும் இருக்கலாம்.

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம் அதுவென
மறுகி வியந்தாலும்
முக்கியம்…
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

Series Navigation