This entry is in the series 20031120_Issue

பவளமணி பிரகாசம்


ஞானமோ மோனமோ ஈர்க்கவில்லை
மெய்யெது பொய்யெது தெரியவில்லை
தாயோ தந்தையோ தேவையில்லை
பொருளும் போகமும் திகட்டவில்லை
நாளும் கிழமையும் நினைப்பிலில்லை
நியாயமும் நேர்மையும் எண்ணவில்லை
கோலமும் கொள்கையும் திண்ணமில்லை
பாதையும் பயணமும் தெளிவாயில்லை
அசுரரும் அரக்கரும் அழியவில்லை
காமகுரோதம் கவ்விய கலியுகத்திலே.

————
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation