This entry is in the series 20031120_Issue

அருண்பிரசாத்.


வாரி வழங்கும்
உன் அருகாமை நினைவுகள்
ஆபுத்திரன் கைகலயத்திற்கு
அடுத்தபடியாய்.

கோவில்குளத்து நீரில் மிதக்கின்றன
நம் ஆன்மாக்களின் ஒப்பந்தங்கள்
நனைந்த உள்ளங்கால்களின் வழியிறங்கி.

நெடுநேரமாய் நீரில் அசைந்தபடி
மெல்ல கேள்வியெழுப்புகிறது
நிலவின் எதிரொளி
முன் மொழிந்த சத்தியங்களைப் பற்றி.

everminnal@yahoo.com

Series Navigation