- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- மறுபிறவி
- அலைப் போர்
- நிலாவிற்கு
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- கவிக்கட்டு — 43
- கதவைத் தட்டிய கடலலைகள்
- ‘சுனாமி ‘
- சுனாமி என்றொரு பினாமி.
- ஊழி
- கிழித்து வந்த காலமே!
- உலகமே
- பிதாவே..எங்களை மன்னியும்!
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- என் வேள்வி
- கிழித்து வந்த காலமே!
- அறிய கவிதைகள்
- சுனாமி வேட்கை
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- முட்டாள்களின் பெட்டகம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- உயர்பாவை 3
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
புதியமாதவி

====
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
பிழைத்திருப்பதற்க்காக
நன்றி சொல்ல
எங்களால் முடியாது.
பிழைத்திருப்பதே
பிழையாகிப்போனதால்
அச்சுப்பிழையில்
அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம்.
பரமப்பிதாவே எங்களை மன்னியும்
கோழிமிதித்து குஞ்சுகள் மாண்டன
கருவறையே கல்லறையானது
முலைப்பாலில் உயிர்க்கொல்லி
ஒப்பாரியில் உன் சங்கீதம்.
பரமப்பிதாவே…
எங்களை மன்னியும்..!
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
இப்போதாவது-
உயிர்த்தெழுவது எப்படி என்பதை
எங்கள் துடுப்புகளுக்கு
சொல்லிக்கொடும்..
உடைந்தப் படகுகளிலிருந்து
விரியவேண்டும் எங்கள் வலைகள்.
—-
புதியமாதவி,மும்பை.
puthiyamaadhavi@hotmail.com