- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- மறுபிறவி
- அலைப் போர்
- நிலாவிற்கு
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- கவிக்கட்டு — 43
- கதவைத் தட்டிய கடலலைகள்
- ‘சுனாமி ‘
- சுனாமி என்றொரு பினாமி.
- ஊழி
- கிழித்து வந்த காலமே!
- உலகமே
- பிதாவே..எங்களை மன்னியும்!
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- என் வேள்வி
- கிழித்து வந்த காலமே!
- அறிய கவிதைகள்
- சுனாமி வேட்கை
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- முட்டாள்களின் பெட்டகம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- உயர்பாவை 3
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
நாகூர் ரூமி

====
சில கேள்விகளை ஊற்ற ஊற்ற
வளருகின்றன பதில்கள்.
சில பதில்களை ஊற்ற ஊற்ற
முளைக்கின்றன கேள்விகள்.
சில கேள்விகளை தரையில் கேட்டால்
விடை சொல்கிறது வானம்.
சில கேள்விகளை வானத்திடம் கேட்டால்
பதில் சொல்கிறது பூமி.
கசப்பான கேள்விகளுக்கு
பாயச பதில்களும்
எட்டிக் கேள்விகளுக்கு
இனிப்பான பதில்களும்
பரிமாறப்படுவதுண்டு.
பதில் தேவைப்படாத கேள்விகள்
பல உண்டு.
கேள்விகளை அழிக்கும் பதில்களும்
சில உண்டு.
கேள்விகள் பதில்களாகும்போது
பதில்கள் கேள்விகளாகின்றன.
கேள்விகள் களைப்புறும்போது
பதில்களும் பட்டுப் போகின்றன.
கேள்விகளும் பதில்களும் அற்றதுதான்
என் வேள்வி.
–நாகூர் ரூமி