This entry is in the series 20090828_Issue

மதியழகன் சுப்பையா


உன்னை தேவதையென்று
ஒத்துக் கொள்ள மறுக்கிறாய்
தேவதையின் குறைந்த பட்ச அடையாளம்
இறகுகள் என்கிறாய்
உன் முதுகில் இறகுகள்
பிடுங்கப் பட்ட தழும்புகளை
கண்டிருப்பதாக சொல்கிறேன்
ராட்சசிகளுக்கும் இறகுகள் உண்டே ?
மனக்குழப்பமடைகிறாய்
அன்பு நிறைந்திருப்பது தேவதைத்தன்மை
அப்படித்தான் இருக்கிறாய் நீ
துரோகத்தை மறைக்க
மிகையன்பு காட்டலாமில்லையா?
விட்டுக் கொடுக்க மாட்டேனென்கிறாய்
நீயிருக்கும் சூழலில் மகிழ்ச்சி கமழ்கிறதே
இன்னபிறர் இருப்பதையும் அறிவாய் தானே,
அப்புறமென்னவென்கிறாய்
நீ பொய் சொல்வதில்லையே
அது பிறரின் நம்பிக்கையென்கிறாய்
நீ நற்பண்பும் நன்னடத்தையும் நிரம்பியவள்
நடிப்பாக இருக்கலாமில்லையை என்கிறாய்
நீ தேவதை இல்லையென்கிறேன்
கண்ணீர் உதிர்த்து புன்னகைக்கிறாய்

madhiyalagan@gmail.com

Series Navigation