திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என் காதலி வருவது போல்

வி பிச்சுமணிமறியல் செய்யும் மாற்று கட்சியினரை காலையில் கைது செய்து மாலையில் விடுவிப்பது போல் பரிதியை பகல் எல்லாம் பிடித்து வைத்து கொண்டு மாலையில் விடுவித்தது மழை மேக மூட்டம் வானம் வெள்ளைஒளி லிட்மஸ்…

வேத வனம் – விருட்சம் 45

எஸ்ஸார்சி பழிச்சொல்லிலிருந்து காப்போன் சோமனே எமது மந்திரக்காவலும் சோமனே பிரம்மத்தை ப்பழிப்போனை அழிப்போனும் அச்சோமனே நல்மனம் நல்குக உதயசூரியனைக்காணும் பேறு பெறுக யாமே அக்கினி நீயே அழைத்த உடன் வருவோன் தேவர்கட்குத்தூதன் அக்கினியில் ஒருவன்…

வழியனுப்பு

கோ.புண்ணியவான்எல்லாமும் முடிந்தபின்னர் நன்றி கூறி வாழ்த்துச்சொல்லி கட்டியணைத்து கண்ணீர் உகுத்து அஞ்சலிபாடி கடைசியாக சா¢த்திரமாக்கிவிடுககிறோம் வெட்கமில்லாமல் கோ.புண்ணியவான் ko.punniavan@gmail.com

‘ரிஷி’யின் கவிதைகள்

ரிஷிநடப்பு (1) பலவீனம் என்னால் உருவாக்கவியலாத ஒரு தாமரைப்பூ தன்னால் பல்கிப் பெருகியவாறு. நீரின் ஒரு துளியை உள்ளங்கையில் திரட்டியெடுக்கலாகாமல் திணறிக் கொன்டிருக்கிறோம் இன்னமும். ஐந்து விரல்களை ஒரேயளவாய் இயல்பாய் நீட்டிக் கொள்ள முடியுமா…

சிங்கப்பூர் தேசிய தினம் 44

யூசுப் ராவுத்தர் ரஜித்ஆழிகள் தொழும் ஆசிய அரசி நீ விளைக்க நீரில்லை விளைய நிலமில்லை ஆனாலும் வற்றவே இல்லை உன் வர்த்தக நதி உலகெங்கும் உன் உபநதிகள் உலகம் சுற்றும் உன் கிளைநதிகள் ஊசிமுனையென…

பசி:

கி.சார்லஸ்பூக்களை பிறகு பறித்திருக்கலாம் பாவம்... பசியோடு பட்டாம்பூச்சி. ckicharles@yahoo.com

நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்

கே.பாலமுருகன்பக்கத்து ஊரிலிருந்து தப்பித்து வந்த மழைக்குருவியின் கால்களிலிருந்து தவறுதலாகச் சொட்டிவிட்டது சில மழைத்துளிகள் வெகுநேரமாக தனது சிறகை சிலுப்பிக் கொண்டிருந்த சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும் தேங்கிக் கிடந்தது மழைக்காலம் உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது கண்களிலிருந்து வழிந்திருந்த…

உடைந்த பொம்மைகள்

மணி அய்யர்கால், கை கண் இழந்து உயிர் துறந்த விளையாட்டு பொம்மைகளின் மயானத்தில் பணம் போட்ட தந்தையின் குரல் மியூட் செய்யப்படுவது ஆச்சரியமில்லைதான்.. என் பயமெல்லாம் உடைந்த பொம்மைகளோடு நானும் ஒரு ஓரத்தில் என்றாவது…

சம்பவம்

ரா. கணேஷ்பாட்டி இறந்துவிட்டாள் செய்தி வந்தது ரயில் ஏறினோம் சண்டை போட்டு இடம் பிடித்தோம் ஓட்டலில் சாப்பிட்டோம் அம்மாவும் அப்பாவும் அழுததால் நானும் அழுதேன் இரண்டு நாளில் மீண்டும் சென்னை வந்தோம் அப்பா செலவு…