This entry is in the series 20091129_Issue

கோ.புண்ணியவான்


நான் வாங்கி வந்த சேலை
தாமன்னா கட்டிய
சேலையில்
கசங்கிப்போனது
செய்திக்கு 7.30க்கு
வரும் பெண்களோடு
ஒப்பீடு கண்டு
நைந்துபோனது
விளம்பர இடைவேளையில்
வண்ணமாய் வண்ணமாய் வீசி
ஒய்யாரம் காட்டும்
பெண்களிடம்
கிழிந்து தார் தாரானது.
இப்படியெல்லாம்
பார்த்து வாங்க
தெரவிசு இல்லையே
என்று சொன்னபோது

ko.punniavan@gmail.com

Series Navigation