This entry is in the series 20021124_Issue

புஷ்பா கிறிஸ்ரி


நீருக்குள்ளே ஓர் நிதர்சனம்

கால்களாலும், கைகளாலும்

நீரை அடித்து, உதைத்து

முன்னேறிச் சென்று

வாழ்க்கைக் கரையை

அடைந்திட செய்யும்

புதிய முயற்சி..

அது விடாமுயற்சி..

விவேக முயற்சி..

துயரத்திலே கிடந்து

தத்தளித்துக் கிடவாமல்,

கரைக்கு நீந்திக்

கரையேறி..வந்து..

விமோசனம் பெறும்

வினோத விளையாட்டு

வாழ்க்கை கற்றுத் தரும்

ஒரு தத்துவப் பாடம்

புதிய பாடமாக..

ஆழம் தெரிந்து

காலை விட்டாலும்

வாழ்வைத் தொடர்ந்து

வாழ்ந்திடும்

வண்ண வினோதம்

மூழ்கினாலும் கூட

தண்ணீர் மும்முறை

தவறைப் பொறுக்க,,

மேலே வந்து,

மூச்சு விட்டு, மூச்சு எடுத்து

உடற்பாரத்தை மென்மையாக்கி

உடற் பயின்றிடும்

உன்னத பயிற்சி..
***
pushpa_christy@yahoo.com

Series Navigation