This entry is in the series 20021124_Issue

ராஜி


மனையில் உள்ளபோது மனதைக் குழப்புவோம்,
இனையல் குறையாதோ என்றும் சிந்திப்போம்!
சீட்டு விளையாட்டில் செலவிடும் கொடுமை….
வீட்டுச் சுமையின் வேலைக்கு நாமடிமை!
‘காலையில் எழுந்து, காபி கலந்து, குழந்தையைக் குளிப்பாட்டி,
சாலையில் விரையும் பரபரப்பில் சமைத்திடும் சீமாட்டி….
வண்டி ஒட்டும் வழிநெரிசலில் மாட்டி…
புலம்பும் பாவையே!! போதாதோ உனக்கு இஇந்நன்றி கிட்டா ஜோலி! ? ‘
துன்பப்படும் வாழ்வு என்றுதான் தீருமோ ?
இன்பமான வாய்ப்பு எப்பொழுது வருமோ ?
தன்மையை அடக்கவேண்டும் திறமையுள்ள ஒருவன்
நன்மை தன்னை நவில்வாருக்கே அருள்வான் இறைவன்!
‘சண்டி ஜனங்களிடம் சிணுங்கித் தலை ஆட்டி…
வந்த கணவனுடன் சண்டையும் போட்டு …
சொந்தக் காரரின் சொல்லையும் கேட்டு….
சலவைத் தொழிலாளியாய், சமையல்காரியாய், ஊதியமில்லாத கூலியாய்ப்
புலம்பும் பாவையே!! போதாதோ உனக்கு இஇந்நன்றி கிட்டா ஜோலி! ? ‘

***
tpsmani@hotmail.com

Series Navigation