திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தூக்கம்

This entry is in the series 20030202_Issue

பிரியா ஆர்.சி.


மூடின கண்களை முதலீடாக்கி
உறக்கத்தை உழைப்பாக்கி
அமைதியைத் தேடும் ஆராய்ச்சி

வாழ்வில் மூன்றில் ஒருபங்கு
அனைவரும் செய்யத்தவறாத
ஓய்வைத் தேடும் ஓட்டம்

ஆசைகளை நிறைவேற்றி
உள்ளுணர்வை வெளிக்கொணர்ந்து
உண்மைகளை பிரதிபலிக்கும்
கனவுக் கண்ணாடிகள்

சாதி மத சச்சரவின்றி
இன மொழி பேதமின்றி
சமரசம் உலாவும் உன்னத தேசம்

நாள் தெரியாத அரங்கேற்றத்திற்கு
தினந்தோறும் தவறாமல் ஒத்திகை!

rcpriya@yahoo.com

Series Navigation

About பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

View all 17 articles →

தூக்கம்.

This entry is in the series 20020310_Issue

பா வீரராகவன்


அப்பா யின்னும் தூங்குறா
அம்மா ஏனோ வைய்யலை
என்னை யுமே தள்ளலை
எழுப்பித் தொலை சொல்லலை

நட்ட நடு ரூமுலே
நன் னாவே தூங்குறா
கிட்டப் போயி நின்னேனே
எட்டிப் போன்னு சொல்லலை

சுத்தி சுத்தி பெரியவா
எத் தனையோ பேசறா
சத்தம் மட்டும் கேக்கலை
அப்பா யின்னும் தூங்கறா

அத்தை எல்லாம் அழுவுறா
பாட்டி கூட கத்தறா
அம்மா மட்டும் என்னையே
சேத்துச் சேத்துக் கொள்ளறா

அப்பா யிப்போ சாமியாம்
சாமி எல்லாம் தூங்குமா
கண்ணை திறந்துப் பாக்குமே
காசு நிறைய கொடுக்குமே

அப்பா நல்ல அப்பா
சாமி நல்ல சாமி
அப்பா தானே சாமி
சாமி தானே அப்பா.

Series Navigation

About பா வீரராகவன்

பா வீரராகவன்

View all 2 articles →