- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- தியான மோனம்
- ஆரம்பம்
- வலை (2000) – 1
- வலை (2000) – 2
- தோட்டத்துப்பச்சிலை
- இயல்பில் இருத்தல்
- ப.மதியழகன் கவிதைகள்
- நரம்பறுந்த நிலம்..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- தண்ணீர்க் காட்டில் - 1
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- நீ, நான் மற்றும் அவன்
- ஒரு கணக்கெடுப்பு
- முடிவற்ற பயணம் …
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- முன்னேற்பாடுகள்
- அப்பாபோல
- வரிசையின் முகம்
- கூடா நட்பினால் விளைவது கேடே
- இதய ஒலி.
- ஊழிற் பெருவலி யாதுள ?
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- மனசாட்சி விற்பனைக்கு
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- கடன்
- ஒரு ஊரையே
- போர்ப் பட்டாளங்கள்
- நீ அறியும் பூவே
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- இரவின்மடியில்
- தாமிரபரணித் தண்ணீர்
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- ஐந்து குறுங்கவிதைகள்
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
ராம்ப்ரசாத்

கடல்.
இது நிலத்தின் பாகுபாடா?
அல்லது குறியீடா?
ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல்
மிதக்கிறது கடல்…
நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை…
காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்…
தலையால் என் பாதம் தொட்டு
வாலால் அத்துவானத்தை இடிக்கிறது
திமிர் கொண்ட கடல்…
காதலில்,
ஊடல்களை விழுங்குவது கரை,
காதல்களை விழுங்குவது கடல்.
நான் கடல் காதலன்.
இதைப் எழுதுகையில்
கடல் பைத்தியம்.
காலம் கடலை உறுதி செய்கிறது…
கடல் பூமியை உறுதி செய்கிறது…
நீரில் எட்டிப்பார் நீ தெரிவாய்…
கடலில் எட்டிப்பார் கடல்தான் தெரியும்…
கடல் ஒரு விந்தை…
விந்தை கடலில் சந்தை…
கடல் உலகின் நவீனம்…
உலகம் கடலின் நவீனம்…
கடல் ஒரு கோணத்தில் இறை…
உன்னிலும் உண்டு…
என்னிலும் உண்டு…
நீரின்றி தோல் இல்லை…
தோல் இன்றி விலங்கு இல்லை…
சிந்தை தூண்டும்
விந்தை உலகம்,
கடல்…
நுரையை உறிஞ்சிக்
குடிக்கிறது கரை…
கரையை உறிஞ்சி
நுரைக்கிறது கடல்…
வேடிக்கை…
கரையை நனைத்ததை
அடிக்கடி மறக்கிறது…
மறந்ததை நினைவூட்டி
மீண்டும் நனைக்கிறது…
விளையாட்டு…
விந்தைத்தாய் கடல்…
எதனோடு மையல் கொண்டு
சூறாவளியை பெற்றுப்போடுகிறாளோ…
அதனோடே காதல் கொண்டு
கண்ணீர் மழையாகிறாள்…
நுரைத்து நரைத்து கிழமாகிறதோ…
நரைத்து நுரைத்து கிழவேடந்தரிக்கிறதோ…
தூரிகை பிடிக்கும்
வண்ண ஓவியள்
கடல்…
மல்லாந்து படுத்து
பகல் முழுதும் தீட்டுகிறாள்
கருநீல வானத்தை
வண்ணவண்ண ஓவியமாய்…
வடநாட்டுப்பெண்ணோ அவள்
தீட்டும் ஓவியத்திலும்
சம்கி நட்சத்திரங்கள்…
ஆங்கொரு மின்மினி
உடைந்து விழும்…
அதை அவள் கண்மணி
அடைந்து கொள்ளும்…
செந்நிற அத்துவான
சரிகையில் எப்போதும்
பன்னிற மணப்பெண்ணவள்…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)