- துணைநலம்
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- உள் சாரல்
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- நிஜங்களாக்கு….
- எங்கள் தாயே
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911
- மெய்மையின் மயக்கம்-8
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
ஈழநாதன்

என்றோ நடந்து
மறந்து போனாலும்
இன்றும் வீசிக்கொண்டிருக்கும்
இரத்த நெடில்!
குண்டும் குழியுமான
குண்டு வீச்சின்
நினைவுச்சின்னங்களின் மேல்
விரையும் நாட்கள்!
இயற்கை உபாதைக்கென
ஒதுங்க கஷ்டமின்றி
நகரத்தின் மத்தியிலே
தலைகாட்டும்
இடிபாடுகள்!
இடிந்தழிந்த வீட்டை
கட்டவா விடவாவென்று
வாஸ்து பார்க்கப்போகும்
படித்த மனிதர்கள்!
எங்களுக்கும் ஒருநாள்
உதவக்கூடுமென்று
செயற்கைக்கால் செய்பவர்களுடன்
சமூக சேவையில்
ஈடுபடும் இளைஞர்கள்!
அழிந்த நகரம்
புதுப்பிக்கப்பட முன்னே
புதிதாய் எழும்
காவலரண்கள்!
ஒவ்வொருநாளும்
காணாமற் போகும்
நண்பர்கள்.
போன இடம் தெரிந்தும்
தேடப்போகாத
பெற்றோர்கள்!
விதவைத் தாய்மாரை
ஏக்கத்துடன் பார்க்கும்
இளைய பெண்கள்!
சைக்கிளை விற்றுவிட்டு
மோட்டார் சைக்கிள் வாங்க
ஆயிரம் தடவை
யோசிக்கும் அப்பா!
இத்தனை நாள்
கழித்து
எங்கள் ஊரில்
மெதுவாய்ச் சூழும்
சாக்களை!!
ஈழநாதன்