This entry is in the series 20101002_Issue

ப.மதியழகன்



ஐந்து முறை பொய்யை
அழுத்திச் சொன்னால்
அது உண்மையாகிவிடுகிறது
வாய்ஜாலத்துக்கு மட்டுமே
வாய்மை
வாழ்க்கை முழுதும்
அசத்திய சமுத்திரத்தில்
முத்துக் குளியலாய்
வாய்க்கப் பெற்றிருக்கிறது
நல்லவன் இல்லாத வல்லவர்களுக்கு
ஏதோவொரு நாளில்
நல்லவனாய் மாறிவிடுவோம்
என்ற எண்ணம்
மனதின் ஓர் மூலையில்
அவ்வப்போது எட்டிப்பார்த்துக்
கொண்டேயுள்ளது
அந்த ஏதோவொரு நாள்
இறக்கும் வரையில்
வரவேயில்லையே ஏன்
என்ற கேள்வி
எல்லோர் மனதையும்
உறுத்திக்கொண்டே உள்ளது.

Series Navigation