This entry is in the series 20101227_Issue

முனைவர் சி.சேதுராமன்


வானம் தன் கைகள் நீட்டி
அள்ளியநீர் மேல் போய்
கரியதாம் நாவற் கனிபோல்
கருப்பாக நிறமும் மாறி
காற்றினால் அலைப்பு முண்டு
கைகளால் குடித்த நீரை அன்பால்
கண்களால் கசியவிட்டு
காசினி குளிரச் செய்யும்
மாசில்லா மழை நீர் என்ற
மாண்பமை உயிரின் நீரே!

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E.Mail. sethumalar68 yahoo.com

Series Navigation