This entry is in the series 20040129_Issue

மதுமிதா


============
முழுவதுமாய்
மறந்து விட்டதாய்
நினைவு உனக்கு
தத்தளிக்கிறாய்
தவறு செய்துவிட்டதாய்

நான் உன்னை
மறக்கவில்லை
வெறுக்கவில்லை
முழுமனதுடன்
மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்

விட்டுவிடு துயரை
தூக்கிக் கொண்டு துவளாதே
தவறு காலத்தினது
நமதல்ல

என்றேனும்
சந்திக்க நேர்ந்தால்
ஓர் புன்னகையில்
மறு உயிர்ப்பு
செய்துகொள்வோம்
நம்மை

==========================
madhumitha_1964@yahoo.co.in

Series Navigation