This entry is in the series 20021022_Issue

டி. மோஹனலட்சுமி


அம்மா நீ ரொம்ப மோசம்!
நான் சிரித்தால்
பொம்பள பெண்ணுக்கு என்னடி
சத்தமாய் சிரிப்பு என்பாய்

வாயிலில் நின்றால்
உனக்கும் உலக்கைக்கும் வித்தியாசம்
தெரியவில்லை என்பாய்

கண்ணாடி பார்த்தால்
உன் பிம்பத்தில் உனக்கேன்னடி
மயக்கம் என்பாய்

வயது பிள்ளைகளுடன் பேசினால்
உலை கொதிக்குது
போய் பார் என்பாய்

முதல் கவிதை என
நான் பூரித்து காண்பித்தால்
போதும் போய் படி என்பாய்

என் நன்பன் பற்றி பேசினால்
அவன் ஜாதி, குடும்பம் என
மெதுவாய் விசாரிப்பாய் நீ

நான் தனி அறையில்
படித்தால் மறைவில் நின்று
என் செய்கை காண்பாய் நீ

அப்பாவின் மடியில் அமர்ந்து
கதை பேசினால், காரனமே
இல்லாமல் அப்பாவை கோபிப்பாய் நீ

புரியவில்லை எனக்கு உன் செய்கை
அம்மா நீ ரொம்ப மோசம்! அதையே
ஆங்கிலத்தில் அழகாய் இன்று என்
பெண் சினுங்கும் வரை..

T_Mohana_Lakshmi@eFunds.Com

Series Navigation