- வாழ்க்கைக் கல்லூாி
- கெட்ட மானுடம்
- ஆசிரியர்
- இன்றைய மது
- ஆயினும்…
- திறவாத தாழ்கள்
- அரிப்பு
- கயிலாயக் குடும்பம்
- ? ? ?
- வில்வமரமும் கனத்த தலையும்
- வியாழன் பூதக்கோள் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்
- பங்களாதேஷ் நாட்டை பசுமை மயமாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது
- மூட்டுவாதத்துக்கு Arthritis அட்டைக்கடிLeeches மருந்து
- வசியம்
- தொலைவு
- சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)
- திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002
- இந்த வாரம் இப்படி – சூன் 14 2002
- பொறுப்புடன் எழுதுவோம்
- அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பது தவறு.
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வெயிலை கொண்டு வாருங்கள் ‘ ஒரு மதிப்பீடு
- மரணம் என்னும் நெருப்பு (எனக்குப் பிடித்தக் கதைகள் – 15 – தாஸ்தாவெஸ்கியின் ‘நாணயமான திருடன் ‘ )
- விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம் (ஏழு லட்சம் வரிகள் -தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு)
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
எஸ். வைதேஹி.

நீ சொன்ன இடத்தில் எல்லாம்
பூத்துக் கொண்டிருந்தது
எனக்கு பிடித்ததாய்
நான் சொன்ன பூ.
நீ பேசிய போதெல்லாம்
அழகாய் வீசிக்காட்டியது
நம் ஊரில்
மாலையில் மட்டும்
வரும் காற்று.
நீ சிரிப்பதாய் எனக்கு
தோன்றும் முன்பே
என் கனவுகள்
உருவம் பெற்றுப் போயின.
நீ எனக்கு
எல்லாமாய் ஆகிவிட்டதாய்
உணர்த்தும் போது,
நான் சொல்லியே ஆக
வேண்டியிருக்கிறது…
உனக்கும்
எனக்குமிடையில்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கு முன்பிருந்தே ஆறு!
***