This entry is in the series 20020617_Issue

ஸ்ரீனி.


கடல் சிலந்திகளின்
கந்தக பிடியில்
கட்டுமரங்களின் கதகளி ஆட்டங்கள்.

ரோஜாவின் இதழ்களில்
முட்கள் பூசும்
சிவப்பு ரத்த சாயங்கள்.

குழந்தையின் வாயில்
கொம்பினை விட்டு ஆட்டும்
மூர்க்க கரங்கள்.

மொட்டை மாடியின்
குட்டை சுவரிலிருந்து
கீழே தள்ளும்
முகமில்லா மனிதர்கள்.

கருமை குழைத்து
கண்களுக்கு பூச
சுவர்கோழி ரீங்காரத்துடன்
சுற்றி வரும் இரவுகள்.

உங்களை போல நானும் விழித்ததால்
இனிமேல் சொல்வதற்கு ஏதும் இல்லை..

***
Ramachandran_Srinivasan@eFunds.Com

Series Navigation