This entry is in the series 20020617_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அகரத்தைத் தொடக்கிய ஆசான்
சிகரத்துக்கு ஏற்றிடும் ஆசான்
உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியாய்
உலகத்தைக் காட்டிடும் ஆசான்

வாழ்க்கையின் வசதிகள் காட்டி
வாழச் சொல்லிடும் வழிகாட்டி
வாழ்க்கைப் பாதையின் நெழிவுகளை
வலி தெரியாது விளக்கிடும் காரியவாதி

அறிவின்றி மங்கிக் கிடந்த பல
அறிவற்ற புத்திசாலிகளையும்
அறிவுள்ள பல சாலிகளாய்த் தீட்டி
அறிவு புகட்டிடும் திறமைசாலி

காலத்தின் முக்கியத்தினைக்
காரணம் காட்டியே தினம்
காலை மாலைக் கல்வியால்
காரியம் நிகழ்த்திடும் கலைவாதி

விடியலின் சுகத்தையும்
விதியின் சுரத்தையும்
விழிகளின் கண்ணீரையும்
விசாரித்து ஆற்றிடும் ஆசான்

pushpa_christy@yahoo.com

Series Navigation