- அவரவர் வாழ்க்கை
- அத்தனை ஒளவையும் பாட்டிதான் -2
- எதிர்கொண்டு
- லெக்ஸஸ் தூங்கி
- கல்லும் முள்ளும்…
- இலையுதிர் காலம்
- இன்னும் கொஞ்சம்
- சாசு வதம்
- திசை தொலைத்த நாட்களின் நினைவாக …
- மாயக் குயவன் மண் பானைகள்!
- எாிச்சலின் புதல்வன்…
- பிரபஞ்சத்து மாயங்கள்! ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘!
- மூலக்கூறு விவசாயம் (பயிர்கள் மூலம் மருந்துகளை உற்பத்தி செய்தல்)
- மனத்தின் வைரஸ்கள் -2 தொத்து நோய் தாக்கிய மனம்
- பெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள் -2
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 11 2001 (உலக வர்த்தக நிறுவனம், மஜாரில் சுதந்திரக்காற்று, போனஸ், பின் லாடன்)
- உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)
- பூமணிக்கு ‘விளக்கு ‘ இலக்கிய விருது
சி. ஜெயபாரதன்

காலச் சக்கரம் சுழன்றதடா!
கைகள் மண்ணைப் பிசைந்தனடா!
ஆழியின் நடுவில் வைத்திடப் பல
ஆயிரம் பானை உதித்தனடா!
குயவன் மனம்விதம் மாறியதில்
குழைக்கும் கைகள் கோணுவதில்
உயர்ந்தும் சிறுத்தும் ஒழுங்கற்றும்
உருவம் கோடி உதித்தனடா!
கருத்தி ருந்தன சில பானை!
கவினோ டிருந்தன சில பானை!
பருத்தி ருந்தன சில பானை!
பால்போல் இருந்தன சில பானை!
வெளுத்த பானை கருத்த வற்றை
விரட்டி அடித்தன வேடர்களாய்!
பலத்த பானை மெலிந்த வற்றை
பணிய வைத்தன வேந்தர்களாய்!
அழகிய பானை ஆனாலும்
அங்க போன தானாலும்
நழுவிக் கீழே தவறிவிடின்
நைந்த மண்ணாய்ப் போகுமடா!
வானவில் போன்ற வாழ்க்கைதனில்
வளர்பிறை பின்பு தேய்பிறையே!
ஊன முற்ற மனித இனம்
ஓயாச் சண்டையில் மாய்வது ஏன்!