This entry is in the series 20080110_Issue

புகாரி



காலைக்கும்
கனிவுக்கும் இடையில்
எச்சில் புரை ஏறியது
உயிரையே வெளியேற்றி

அதன் வள்ளுவ நாயகி
நீயாய் இருக்கமாட்டாயா
என்ற பேராசையில்
செருமிச் செருமிச்
செருமிக்கொண்டே
இருக்கிறேன்

புல்நுனி நீர்ப்பொட்டே…
எத்தனைமுறை
நினைத்திருப்பாய்
நீ என்னை

மறந்தாவது ஒருமுறை
என்னிடம் சொல்லக்கூடாதா

உன் ஆசை மின்னலைகள்
அலையும் வெளிப்பரப்பை
அறியாதவனா நான்

ஏனிப்படி
நாடக இமைகளுக்குள்
சுடர்மணி ஒளித்து
உன்னையே வதைக்கிறாய்

வா…
வருவதுதான் வாழ்க்கை
வேறெதற்கும் வாழ்க்கை
என்ற பொருளில்லை


anbudanbuhari@gmail.com

Series Navigation