This entry is in the series 20100523_Issue

வே பிச்சுமணி


தலை வைத்து படுக்க ஒரு மடி
சாய்ந்து கொள்ள ஒரு தோள்
கோதிவிட நீள் விரல்கள்
பொறுமையுடன் கேட்கும் செவிகள்
கைகளை பொதித்துக்கொள்ளும் கைகள்
முகம் புதைக்க ஒரு நெஞ்சு
கண்ணீர் துடைக்கும் விரல்கள்
அனணத்து முதுகு தட்டும் தோழமை
ஆதரவான வாய் மொழிகள்
கேலி கிண்டல் செய்யா மனம்
பலரிடம் பரப்பாத இதழ்கள்
மேலும் புலம்பாதவாறு ஒரு முத்தம்
இவற்ளை தேடி அலையும்
யாரிடம் சொல்லி அழாத என் சோகம்

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>