- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1
- வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) கவிதை -2 (பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2
- நகரத்தில் வாழும் கிழவர்கள்
- “வேலியை உடைக்கும் மரணம்”
- இன்னொரு கரை…
- பறக்கத்தான் சிறகுகள்
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்
- சாம்பல்நிறப் பூனை
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)
- வேத வனம் விருட்சம் 24
- சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி
- நூல் நயம்: தெரிந்த – கவனிக்கத் தவறிய முகங்கள்
- காதலின் பரிமாணங்கள்
- இருக்கை
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)
- அடவி காலாண்டிதழ்
- தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்
- முடிவு உங்கள் கையில்
- கருணையினால் அல்ல!
- நினைவுகளின் தடத்தில் – (26)
- சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா
- நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை
- மோந்தோ -5 (1)
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- மோந்தோ -5(2)
ரஜித்
எப்படி வளர்ப்பது
பிள்ளைகளை?
அவர்கள் இயல்பிலா?
நம் இயல்பிலா?
‘தாயைப்போல பிள்ளை
நூலைப்போல சேலை’
அறிவிலா?
உருவிலா?
வலைவெளிகள் மேய்ந்தோம்
அப்பாமார்களை ஆய்ந்தோம்
சில சமூகங்களைச் சலித்தோம்
பெற்ற தகவல்கள் இதோ
பெற்றோர்களுக்காக
பத்துவரை
எண்ணத் தெரியாத அப்பா
மகனோ பத்து வங்கி நிர்வாகி
அதிர்ந்துபேசத்
தெரியாத அப்பா
மகனோ அரசியல்வாதி
கசாயம்கூடக்
கண்டதில்லை அப்பா
மகனோ மருத்துவ விஞ்ஞானி
வெளிச்சம் விரும்பாத
வெளவால் அம்மா
மகளோ பிரபல நடிகை
உலோபி அப்பா
மகன் வழங்குகிறார்
மழையாகக் கொடைகள்
அடுத்தவீடுகூட
பகைதான் அப்பாவுக்கு
மகனோ அய்னா பிரதிநிதி
பெற்றோர்போல் பிள்ளைகள்
அறிவிலா?
உருவிலா?
பிள்ளைகளின் அறிவு
உதிப்பதா?
திணிப்பதா?
நேற்றைய அறிவு பள்ளம்
இன்றைய அறிவு வெள்ளம்
வெள்ளப் பெருக்கு
பள்ளம் தங்குமா?
உங்கள் மகன்கூட
ஒபாமா ஆகலாம்
அது அவர்கள் இயல்பிலா?
நம் இயல்பிலா?
எப்படித்தான் வளர்ப்பது
இன்றைய பிள்ளைகளை?
பெற்றோர்களே
முடிவு உங்கள் கையில்
rajid_ahamed@yahoo.com.sg