அனந்த்

கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற
வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக்
கணினிக் கடைமுன்னே காலை முதலே
துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத்
தணியாமல் நீண்டிட்ட தூயவனின் வால்போல்
அணிவகுத்து நின்ற அனைவருடன் கூடி
மணிக்கணக்கில் என்றன் மகளுடன்நான் நின்று
கணினியை வாங்கிக் கடிதில்வீ டெற்றித்
தணியாத ஆவலுடன் மின்விசையைத் தட்டி
மணியான நண்பருடன் மின்தொடர்பு கொண்டேன்
இணையம் வழியே இணைந்து.
****
பொட்டல தினம் = Boxing day