This entry is in the series 20010825_Issue

பெ மகேந்திரன்


புதுமை வரமாக பூமிக்கு வந்ததே

பழைமைகள் யாவும் பண்ணிய தவமே!

ஓயா துருளும் பூமியின் உழைப்பால்

உயர்பெரும் பாிசாய்ப் புதுப்புது நாட்கள்!

ஓடி மகிழும் முகிலின வரவால்

ஒவ்வொரு நொடியும் புதுப்புது வானம்!

மண்ணோடு மண்ணாய் மட்கிய பாறை

விண்தொடும் விரைவில் எாிமலை ஆகும்!

கிழட்டு மரத்தின் முதிர்ந்த விதையில்

தழைத்து வளரும் புதுமரக் கன்று!

கொட்டிய குப்பைகள் கூடிப் புணர்ந்து

பொறுமைத் தவத்தால் உரமாய் மாறும்!

புரட்சியின் புறப்பாடே புதுமை என்பது

பழைமையின் எழுச்சியே புதுமையாய்த் தொிவது!

Series Navigation