This entry is in the series 20041216_Issue

சிக்கந்தர் பாஷா


என் பெயர் உச்சரித்து
சிலிர்க்கவைத்த உன் உதடுகளால்
வார்த்தைகளை எறியாதே
எனக்குள் நான் வரைந்த
உன் பிம்பம்
உன் சொற்களால்
கலைகிறது!

பூனைகுட்டியாய் உன்னருகில்
ஒட்டியிருக்கும் என் அன்பை
எட்டி மிதிக்காதே
வெட்டிவிடும் வித்தையறியாதது
வேதனை சுமந்தும் உன் காலடி
வீழ்ந்திருக்கும்!

பிரியமொன்றையே சுரக்கும்
என் கேணியில்
சகதி இரைக்காதே
உன்னை நனைத்து
உன் காலடியில் உலரும்
உயிரின் வலி அது!

sikkandar.basha@wipro.com

Series Navigation