This entry is in the series 20040819_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


பூத்திருக்கும் கொடி.

நிழலிலே நிற்காமல்
வெயிலிலே நிற்கும் மரம்.

மலை மேடேறி
காலடிக்குக் கீழே காணும் மண்.

கனவைத் தொட
கைகளாய் நீளும் மனம்.

மணக்கும் பூக்கள்…
மகரந்தக் கவிதைகள்…

ஈரம் ஏறிய காற்றில் இடம்கேட்டு
தூர தேசம் போகத் துடிக்கும் வாசம்.

இலை நுனித் தொற்றிய பனி.

ஊருக்கு
தானும் வருவதாகச் சொல்லி
பனித்துளியின்
கைப்பிடித்தழும் காலைக் கதிரொளி.

கூட
ளில்லை நிழல்
நடக்கையில் நான்.

பூப்பறிக்க ளின்றி
பூத்திருக்கும் கொடி.

பூப்பறிக்க ளின்றி
பூத்துதிரும் கொடி.

—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation