This entry is in the series 20070125_Issue

கே. ஆர். மணி


ஞாயிறு முன் இரவு.
மின்சாரம் போனது.

அணைந்து போனது,
தொலைக்காட்சி பெட்டிக்குரல்
கணிப்பொறி திரை
மின்விசிறியின் ஊமைக்குரல்
ஒளிவிளக்கு உமிழும் சத்தம்
மற்றும் சில இன்ன பிற.

அந்த அமைதியில்
மனிதர்கள் குரல் தெளிவாய் கேட்கிறது.
இன்னும் இருட்டுக்குள் அமிழ்ந்தால்
ஒரு வேளை என் குரலும்
எனக்கு கேட்குமோ என்னவோ..


mani@techopt.com

Series Navigation