This entry is in the series 20030717_Issue

சத்தி சக்திதாசன்


கன்னத்தில் முத்தமிட்டால் கள்மயக்கம் தோன்றுதடி
கனிவான தமிழில் கூறிவைத்தான் பாரதியே
என் எண்ணத்தில் உன் நினைவு தோன்றும் போதெல்லாம்
ஏனடி கனவுகள் உள்ளத்தை உருக்குலைக்கின்றன
உன்னகத்தில் நான் வந்து குடி புகுந்து வாழ்வதற்கு
உண்மையாய் நீ கேட்கும் வாடகை தான் என்ன
என்னிதயத்தில் நீ நுழைந்தபோது மைவிழியே
எடுத்தாயா அனுமதி என்னிடத்தில் பொன்மயிலே
காதலெனும் படகை கொண்டுவந்தேன் உன்னிடத்தே
கடைசிவரை வசதியாக கல்யாணப் பயணத்தை மேர்கொள்ளை
இதயத்தை உன்னிடத்தில் பறிகொடுத்து பரிதவிக்கும் ஏழையிவன்
இப்போதும் பிச்சையாய் கேட்பதெல்லாம் உன்னிதயம் ஒன்றுதான்.

sathnel.sakthithasan@bt.com

Series Navigation