- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு
- எங்கே போகிறேன் ?
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- ….நடமாடும் நிழல்கள்.
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
கவிநயா

நில், நில், கொஞ்சம் பொறு
எங்கே ஓடுகிறாய் ?
என்னால் முடியவில்லை
என்றது மனசு
சற்றே நின்று உற்றுப் பார்த்தேன்
சுவாசம் ஒன்றை இழுத்து விட்டேன்
ஆடி காட்டிய உருவத்தில்
சிரமப்பட்டு என்னைத் தேடுகிறேன்
களைத்துப் பதைத்த முகத்தில்
வருடங்களின் பதிவு
நெற்றியில் வரிகளாய்
உப்புக் கரிக்காமல் மட்டும் இருந்திருந்தால்
தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்த்திருக்கும்
கண்ணீரின் ஓட்டம்
வற்றாத வாய்க்காலாய்
கையைக் காலை உதைத்துக் கொண்டு
கதறி அழுதாலும்
சீந்துவாரற்ற மனசு
அனாதைக் குழந்தையாய்
பின்னால் விடாமல் விரட்டி வரும்
துயரத்தின் வலிய கரங்கள்
முடிவில்லாமல் நீளமாய்
நிம்மதியும் புன்சிரிப்பும்
எட்டாமல் எங்கோ
தொலை தேசத்துக் கனவாய்
இதையெல்லாம்
நினைத்துப் பார்க்க நேரமின்றி
திரும்பிப் பார்க்கத் திராணியின்றி
நாளை என்ற நம்பிக்கை நோக்கி
நிற்காமல் ஓடுகிறேன்
–கவிநயா
meenavr@hotmail.com