This entry is in the series 20040827_Issue

நெப்போலியன்


நாய்
ஒன்று
அருகில் வந்தது
வாலாட்டி
கால் நக்கியது
கால் தூக்கி
தன் ஆண்குறி
முகர்ந்தது
காதிற்கு
குறிவைத்த
ஈயைக் குரைத்தது
வாலால்
புழுதி வளைத்து
நிமிராத
வால் கடித்தது
பெட்டை
ஒன்றை
வழியில் கண்டது
வெண்ணெய் மூக்கை
ஒளியில் காட்டியது
திறந்த வாய்
நாக்கில்
எச்சில் கொட்டியது
என்னை
ஒருமுறை
இரக்கமாய் பார்த்தது
பிறகு,
பெட்டை பின்னே
ஊளையிட்டு
ஓடியது….

—- நெப்போலியன்
சிங்கப்பூர்

( நாய், அன்னம், கவரிமான், புலி என எகினம் என்ற ஒரு சொல் இவை
நான்கிற்கும் பொருளாகும் )
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>