This entry is in the series 20061012_Issue

கரு.திருவரசு



எடுப்பு

தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே

சுகமான இராகமே சிட்டுக்குருவியே

கண்ணிகள்

எட்டி எட்டிப் போனாலும்

என்னநிலை ஆனாலும்

கட்டுப்பட்டுப் போனேனே சிட்டுக்குக்குருவியே

பட்டுப் பட்டு மேனியிலே

பட்டுவிட்ட நேசத்திலே

தட்டுக்கெட்டுப் போனேனே சிட்டுக்குருவியே

சின்னச் சின்னப் பூவாக

சிந்தும் சந்தப் பாட்டாக

வந்துவந்து போனாயே சிட்டுக்குருவியே

கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும்

கொஞ்சிக் கொஞ்சிப் பார்த்தாலும்

அஞ்சி அஞ்சிப் போனாயே சிட்டுக்குருவியே

thiru36@streamyx.com

Series Navigation