- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- நீரலைப்பு
- மூன்று குறுங்கவிதைகள்
- ஆறாம் அறிவு
- துளிகள்.
- தாகம்
- மூன்று கவிதைகள்
- இரு கவிதைகள்
- மனம்
- பழக்கம்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- இரண்டு கவிதைகள்
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்
- போனதும், போனவைகளும்
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- திறனாய்வுக் கூட்டம்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- நீயும் நானும்
- இரண்டு கவிதைகள்
- வீடு
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது
- விண்ணின்று மீளினும்….
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விடியும்!நாவல் – (39)
- கடை
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- ரோறா போறா சமையல்காரன்
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- Bowling for Columbine (2002)
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- பதிவிரதம்
- இனிய காட்சி
- ரோறா போறா சமையல்காரன்
பா.தேவேந்திர பூபதி

குடத்திற்குள் போட்ட
ஒவ்வொரு கற்களாய்
மனிதன் சாதனைகளை
அடுக்க அடுக்க
அடியில் கிடந்த
குரோத எண்ணங்கள்
மேலெழுந்தது
சாதனைகளையும் மூடி மறைத்தபடி!
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில்
பிறக்காத தன்னலம்
ஆடை கட்ட ரம்பித்த பின்
நிர்வாணப் படுத்தின
ஆன்மாவையும் சேர்த்து
அடுத்தவன் முதுகில்
ஏறி அமர்ந்து
வாழ்க்கையை சபிக்கும்
கபட வேதாந்தங்களால்
கர்ப்ப கிரகங்கள்
கல்லறையாயின!
தெய்வங்கள் தெருவில்
புறம் போக்கு நிலங்களுக்கு
போட்டியிட்டன..
சண்டைக்கு ஆள் சேர்த்தபடி
ஆறாம் அறிவு
அதிகமாகிப் போனதால்
மனிதனின்
ஆசைகளுக்குக் கூட
கொம்பு முளைத்தன!
போரும் அமைதியும்
இவனுக்கு
பயிற்சியளித்தது
பழி வாங்க மட்டுமே!
—-
kousick2002@yahoo.com