This entry is in the series 20101010_Issue

ஷம்மி முத்துவேல்



இயற்கை நெசவாளியின்
தேர்ந்த படைப்பின்
அணிவகுப்போ இந்த
வானபோர்வையின் வண்ண சிமிட்டல்கள் .

வேண்டிய சாயங்களை
பூசி கொள்கிறது
மனம்……
மகிழ்ச்சியும் துக்கமும்
ஊடு பாவும் சந்து பாவுமாய்

காதலனை கை பிடிக்க போகும்
கனவுகளை சுமந்து கொண்டு
மகிழ்வோடு விண்மீன்களை
எண்ணி கொண்டு
கன்னி ஒருத்தி…….

கிழிந்த நாராய்
கயிற்று கட்டிலில்
காலனுக்காக காத்து கொண்டு
நட்சதிர கோள்களை நொந்து கொண்டு
கிழவி ஒருத்தி….

ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்

Series Navigation