This entry is in the series 20091009_Issue

செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி


முன்பு
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுதி விடுவேன்
ஒரு கவிதை

மழைக்கா
எனக்கா
என்று
புரியாத போதிலும்

மூன்று வரிகள்
முடிந்திருக்கையில்
அடித்து சாத்துகிறாள்
கதவை

மூன்று வரிகளில்
முடிகிறது
என் கவிதை

மழையின் சத்தம்
மட்டும் காதுகளுக்குள்ளே…

இப்போதும்
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுத முயல்கிறேன்
ஒரு கவிதை

–cliffnabird@gmail.com

Series Navigation