This entry is in the series 20080227_Issue

நரேந்திரன்


கரையான் தின்னக்
கரைந்து நிற்குமொரு
புளுத்த மரத்தினில் துளிர்த்த இலைகள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
ஒவ்வொன்றாக.

இது இலையுதிர் காலம்.

பசை தடவி ஒட்டப்பட்ட
பகட்டு இலைகளே இன்று
புளுத்த மரமெங்கும்.

இன்னொரு இலை துளிர்க்கும் நாள் எந்நாளோ?

மரணித்தது ரங்கராஜன் மட்டுமே.
சுஜாதா என்றும் வாழ்வார்.

narenthiranps@yahoo.com

Series Navigation