This entry is in the series 20040527_Issue

– கி. சீராளன்.


சுதந்திர தேவிக்கு

துப்பாக்கியால் செய்த செங்கோல்.

சுடுகாடுகள் சமைக்க

உலக போலீஸ்.

செத்த பாம்படிக்க

துப்பாக்கி விளையாட்டு.

நிராயுதபாணிகளை நிர்வாணியாக்கி

வக்கிரங்கள் தீர்க்கும்,

நாய் மீதேறி

நரமாமிச வேட்டை,

சுடும் பயிற்சிக்கு

மனித உடல்களே குறி.

நிறைய இருக்கிறோம் நாம்.

….
punnagaithozhan@yahoo.com

Series Navigation