This entry is in the series 20020805_Issue

கண்ணகி கோபி


முகமில்லா ஒருவனுக்கும்;
அழகு சாதனத்தின் மீது ஆசைஸ
பாதி முகத்திலிருக்கும் ஓர் விழி
கொண்டு உலகைக் காண ஆசைஸ
வயிறில்லாமல் போனாலும் வயிறு
நிறைய நிறைய சாப்பிட ஆசைஸ
வாய் திறக்காமுடியாவிட்டாலும் வார்த்தை
கொண்டு விளையாட ஆசைஸ
கையில்லாமல் போனலும் பெண்ணுக்கு
பூ கொடுத்து காதலிக்க ஆசைஸ
காலில்லாமல் போனாலும் கால் மீது
கால் போட்டு உட்கார ஆசைஸ
செத்து சிதைக்கு போனாலும்
சீமானாய் வாழ்ந்து பார்க்க ஆசைஸ
ஆவியான பிறகும் அரசியல்வாதிக்கு
அனுபவிக்க ஆசை

***
kannagigowpi@rediffmail.com

Series Navigation