- நேர்காணல்
- இடம் : தமிழ்நாடு நாடு இந்தியா பின்னணி: மதக்கலவரம்
- அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்….
- கணிணியுகம்
- மஹேஸ்வதா தேவி மற்றும் கோவிந்த் நிஹ்லானியின் நக்ஸலிசம் பற்றிய மீள்பார்வை :1084 ஆம் இலக்கத்தின் அன்னை
- எழுதிச் செல்லும் விதியின் கை
- சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 2
இவன் மனிதனா… ?

திடுக்கிற்று நின்றது காற்று.
கருகித் தீய்ந்தது சூரியன்.
வதங்கி உதிர்ந்தன தளிர், இலை, பூக்கள்.
மனிதனல்ல மிருகம்.
இமையாது உருளும் கண்களாய்
காது மடலோரம் பதுங்கிற்று-சட்டம்.
காவலோ-
புறந்தலையைக் குறிவைத்து
அரவமற்றுப் பின் தொடரும்.
நீதான் மிருகம் X இல்லை நீதான்
சொல்லியும்
சொல்லாது நழுவியும்
வியாபார விதிபேணி
உண்மையை
அளந்தே உரைத்தன
பத்திரிக்கை… மீடியாக்கள்.
மனிதன் இறந்துவிட்டான்
புராதன வீட்டில்
நிழல்களாய் உலாவும்
மூதாதையர் முணுமுணுப்பை
மொழிபெயர்த்தது சரித்திரம்.
சந்துமுனையிலோ… சாலையோரமோ…
‘பேரருள் ‘ இரந்தபடி
அப்போதும் கேட்கும்
பள்ளிவாசல் பாங்கொலியும்
கோயில்மணி ஓசையும்.
கால-இட-வெளி தாண்டிய
சூன்யத்தில்
ஓரொலியாய் எதிரொலிக்கும்
அதன் உள்ஒலி.
அதனின்றும் பிரிந்த
கதிர்இழையொன்று
கீழே-தரையில் ‘சாபமாய்க் ‘ கிடக்கும்
மனிதனின் மனவாசல்
மெல்லத் தொடும்-
மனிதம் வேண்டி.
-முடவன் குட்டி
| திண்ணை
|