This entry is in the series 20090625_Issue

ரஜித்


ராஜராஜ சோழனுக்கு
பெரியகோயில் விளம்பரம்

சாஜஹானுக்கு
தாஜ்மஹால் விளம்பரம்

பல்லவர்களுக்கு
சிற்பங்கள் விளம்பரம்

மோனலிசாவுக்கு
புன்னகை விளம்பரம்

ஆம்ஸ்ட்ராங்குக்கு
சந்திரன் விளம்பரம்

விஞ்ஞானிகளுக்கு
விஞ்ஞானம் விளம்பரம்

வித்தகனுக்கு
கின்னஸ் விளம்பரம்

அறிவாளிக்கு
அறிவு விளம்பரம்

திறனாளிக்கு
திறன்கள் விளம்பரம்

படைப்பாளிக்கு
படைப்புகள் விளம்பரம்

கொடையாளிக்கு
கொடைகள் விளம்பரம்

இதுபோல்
வரமேதும் இல்லாதோர்க்கு
வாயே விளம்பரம்


Series Navigation