This entry is in the series 20050401_Issue

ரஜித்


ஒளி மொத்தமும் உமிழ்ந்துவிட்டதால்
இனி ஒளிர முடியாதாம்
ஒரு வைரம் சொல்கிறது

மணங்கள் முடிந்த்தால் இனி
வெறும் விறகுதானாம்
ஒரு சந்தனக்கட்டை சொல்கிறது

இசைகள் மொத்தமும் ஊதி முடிந்ததால்
இனி வெறும் குழாய்ிதானாம்
ஒரு புல்லாங்குழல் சொல்கிறது

கற்பனைகள் முடிந்ததால்
இனி கவிதைகள் இல்லையாம்
ஒரு சிந்தனை சொல்கிறது

ஊற இனி நீரில்லையாம்
ஒரு மணற்கேணி சொல்கிறது

தீந்தமிழ் சொற்களெல்லாம்
தீர்ந்து போனதால்
தமிழ்த் திரைக்கு இனி
தமிழ்ப் பெயர் இல்லையாம்

ஒரு தமிழன் சொல்கிறான்
தமிழனிடம்

தமிழைப் பழித்தோனை
தாய் தடுத்தாலும் விடாத
பாரதிதாசனின் கொள்ளுப்பேரா
நீ வம்ச விளக்கா இல்லை
வம்ச விலக்கா

ரஜித்

rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation