This entry is in the series 20020407_Issue

எஸ். வைதேஹி.


கரு அறுந்து தொங்கும்
ஒரு நாளில்
எனக்கு மட்டும்
கேட்டுக்கொண்டேயிருந்தது
நிதானமின்றி ஒரு சத்தம்.

கூழாங்கள் பாறை மீது
அவ நம்பிக்கையாய் ஒரு மழை.
மூடும் கண்களில்
இழுபடும் ரப்பர் கனவு.

அர்த்தமேயில்லாத வார்த்தைக்கு
நடுவில்
ஆகாயம் நோக்கி நான்.

Series Navigation