பரணர்

மீனொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனை மறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையாற்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரை சேர்க்குந்து
மலைத்தாரமுங் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடன் முழவின் முசிறியன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையல்லோர் வரையல ளிவளெனத்
தந்தையுங் கொடாஅ னாயின் வந்தோர்
வாய்ப்பட விறுத்த வேணியாயிடை
வருந்தின்று கொல்லோ தானே பருந்துயிர்த்
திடைமயங் காரிடை நெடுநலூரே.