This entry is in the series 20080131_Issue

ஜடாயு


அன்புள்ள மணி,

இந்த வாரத் திண்ணையில் பங்குச் சந்தை வீழ்ச்சியை முன்வைத்து நீங்கள் தீட்டியிருந்த எழுத்துச் சித்திரம் அருமை. ஒரு முதலீட்டாளனாக மட்டுமின்றி, ஒரு சாதராண மும்பைவாசியின் பார்வையிலும் நின்று தலால் தெருவையும் அதன் சாமானிய மனிதர்களையும் பற்றித் தந்த அவதானிப்புகள் சுவையாகவும், கூர்மையாகவும் இருந்தன. பங்குச் சந்தை சூழலில் வாழ்க்கை பற்றிய தரிசனம் காணும் ஒரு தத்துவத் தேடலாகவும் இருந்தது இது.

எகனாமிக்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட எல்லா செய்தித் தாள்களிலும் படித்த அலசல் கட்டுரைகளுக்கு நடுவில், இது போன்றதொரு ஆழ்ந்த, வித்தியாசமான பதிவு தந்ததற்கு மிக்க நன்றி.

திண்ணை வெளியில் இது போன்ற மேலும் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

Series Navigationகாலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap) >>