- 98413-11286
- பால்யம்
- தியானத்தைத் தேடி…
- உனக்காக
- நீயும் மகனும்
- ‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘
- விடியல் எங்கே ?
- வாழ்க்கை
- நினைவுகள்.
- மறக்கப்பட்டவை!
- எண்ணங்களின் வண்ணங்கள்
- எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?
- ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்! (Anti-Nuclear Power Activists & A
- அறிவியல் துளிகள்-25
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு
- பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு
- சுகம்
- ஜனனம்
- உங்களுடனும் சில கணங்கள்
- புழுக்கம்.
- இரண்டு கன்னடர்களும் நானும்:::
- நிஜமற்ற நிழல்
- வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு
- கடிதங்கள்
- இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4
- ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு
- தனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
புஸ்பா கிறிஸ்ரி

திருட்டு தம்மடித்து
திட்டம் போட்டு,
பள்ளிக்கும் மட்டம் போட்டு
அப்பாவை, அம்மாவை
அப்பாவிகளாக்கியது
அன்று நீமட்டுமா ?
உன் மகனும் தான்
இன்று போல் உன்
மன்றத்து மனத்தில்
நினைவலைகளில்
நீ செய்த மாயாஜாலங்கள்.
மொட்டை மாடியில்
முகம் மறைத்து
பட்டத்து ராஜாவாக
பாசாங்கு செய்து
பத்திக் கொள்கிறான்
உன் மகன் சிகரட்டு.
பாசமாய், அணைத்து,
பண்பாய் புத்தி சொல்ல
முடியுமா உன்னால் ?
உன் மனச்சாட்சி
கொல்கிறதா ?
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்..
pushpa_christy@yahoo.com